Site icon Tamil News

இலங்கையில் குறைந்த விலையில் தேனீர் வழங்கவில்லை என்றால் புகைப்படம் அனுப்புமாறு அறிவிப்பு

இலங்கையில் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் விற்கப்படும் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிளேன் டீயின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக  சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களது சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இம்மாதம் 5 ஆம் திகதி முதல் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்படி 100 ரூபாவாக காணப்பட்ட பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைத்து 90 ரூபாவாகவும், 40 ரூபாவாக காணப்பட்ட பிளேன் டீயின் விலையை 10 ரூபாவால் குறைத்து 30 ரூபாவாகவும் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள விலைகளில்  உணவுப்பொருட்கள் மற்றும் தேநீர் வழங்கப்படாவிட்டால், அந்த  உணவகத்தை படம்பிடித்து 0788 714 126 வட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கும்படி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நித்திரையில் இருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் விழித்தெழுந்து பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version