Site icon Tamil News

இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்தது குடும்பம் 75 ஆண்டுக்கு பின் ஒன்று சேர்ந்தது.

75 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த குருதேவ் சிங், தயா சிங்கின் குடும்பத்தினர் ஆட்டம் ஆடி, பாட்டு பாடி, மலர்கள் தூவி மகிழ்ச்சியாக மீண்டும் ஒன்றிணைந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

சுதந்திரத்துக்கு முன்பு அரியானாவின் மகிந்திரகர் மாவட்டத்தின் கோம்லா கிராமத்தில் சகோதரர்கள் குருதேவ் சிங், தயா சிங் மறைந்த தங்களது தந்தையின் நண்பர் கரீம் பாஷ் உடன் வசித்து வந்ததாகவும்,

கரீம் பாஷ்  இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜாங் மாவட்டத்துக்கு புலம்பெயர்ந்த நிலையில்,

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரர் தயா சிங்கை கண்டுபிடித்து தரும்படி இந்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியதாக குருதேவ் சிங்கின் மகன் முகமது ஷரீப் கூறினார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தின் மூலம் முகமது ஷரீப் தனது சித்தப்பா தயா சிங்கை கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Exit mobile version