Site icon Tamil News

இந்தியாவில் 79.4 மில்லியன் டொன்கள் கார்பன் இருப்பு உள்ளதாக அறிவிப்பு!

2019 ஆம் ஆண்டின் கடைசி மதிப்பீட்டை விட இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன் டொன்கள் அதிகரித்துள்ளது.

ஆண்டு அதிகரிப்பு 39.7 மில்லியன் டொன்களாகும். இது 145.6 மில்லியன் டொன் கார்பன் ஆக்சைடுக்கு சமம் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் அஷ்வினி தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய காடுகளின் அறிக்கை 2021 இன் படி, காட்டில் உள்ள மொத்த கார்பன் இருப்பு 7,204 மில்லியன் டொன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 529.47 மில்லியன் டொன் கார்பன் இருப்பு உள்ள தோட்டங்கள் மற்றும் காடுகளுக்கு வெளியே உள்ள மரங்கள் அடங்கும்.

2019 ஆம் ஆண்டின் கடைசி மதிப்பீட்டை விட நாட்டின் கார்பன் இருப்பு 79.4 மில்லியன் டொன்கள் அதிகரித்துள்ளது. ஆண்டு அதிகரிப்பு 39.7 மில்லியன் டொன்கள் ஆகும். இது 145.6 மில்லியன் டொன்கள் காபனீரொட்சைட்டுக்கு சமமானதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version