Site icon Tamil News

அமெரிக்க பிரபல வங்கி திவால்! இறுதி அத்தியாயத்தை நோக்கி நகரும் செயற்பாடுகள்

அமெரிக்காவின் 160 பில்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள வங்கி திவாலாகியுள்ளது.

சிலிக்கான் வேலி எனப்படும் வங்கி திவால் ஆனதால் அந்த வங்கி சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

மேலும் சிலிக்கான் வேலி வங்கி அதன் கட்டுப்பாட்டாளர்களால் மூடப்பட்டது என்றும் அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் அமெரிக்காவை சேர்ந்த FDIC தெரிவித்துள்ளது.

சிலிக்கான் வேலி வங்கி வீழ்ச்சி பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 2008ம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அத்தகைய பெரிய வங்கிச் சரிவு மற்ற சந்தைகளுக்கும் பரவக்கூடும் என்ற கவலை உருவாகியிருக்கிறது.

இந்த மூடப்படும் உத்தரவானது கலிபோர்னியா நிதி பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு துறையால் வெளியிடப்பட்டது.

இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி FDIC, 250,000 அமெரிக்க டொலர் காப்பீட்டு வரம்பு வரை அதன் வைப்பாளர்களுக்கு (கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1980கள் முதல் FDIC-யானது புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் தந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

கடந்த ஆண்டின் கடைசியில் சிலிக்கோன் வேலி வங்கியின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலருக்கு மேல் இருந்தது. அந்த வங்கியில் செலுத்தப்பட்ட வைப்புத் தொகையின் மதிப்பு சுமார் 175 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version