Site icon Tamil News

அமெரிக்க துணை இராணுவ அமைச்சராக ராதா ஐயங்கார் நியமனம்

அமெரிக்க துணை இராணுவ அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் ராதா ஐயங்கார் பிளம்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அரசு நிர்வாகத்தின் கீழ் இராணுவ துணை அமைச்சர் நியமனத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு நிபுணருமான ராதா ஐயங்கார் பிளம்ப் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது துணைப் பாதுகாப்புச் செயலாளரின் தலைமைப் பணியாளராக பணிபுரியும் ராதா ஐயங்கார் பிளம்பை 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த மதிப்புமிக்க பதவிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்தார்.

ராதா ஐயங்கார் பிளம்ப் பாதுகாப்பு துணை செயலாளராக இருப்பதை செனட் உறுதிப்படுத்தியது.

முன்னதாக கூகுளில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு இயக்குநராகவும், பேஸ்புக் நிறுவனத்தில் கொள்கை பகுப்பாய்வுக்கான உலகளாவிய தலைவராகவும் ராதா ஐயங்கார் பிளம்ப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version