Site icon Tamil News

அமெரிக்க அதிபருக்கு ”அமைதிக்கான சாக்லேட் பார்” வழங்கிய கனேடிய பிரதமர்!

கனடா நாட்டிற்கு வருகை தந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரு நாடுகளிடையே அமைதியை நிலை நிறுத்தும் வகையில் சாக்லேட் பாரை கனேடிய பிரதமர் வழங்கியுள்ளார்.கனடா நாட்டிற்கு பயணம் வந்திருக்கும் ஜோ பைடன் ஒட்டாவா நகருக்கு வருகை புரிந்துள்ளார். அவரை வரவேற்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட அமைச்சரவை முழுவதும் வந்திருந்தனர்.

ஆன்டிகோனிஷ், என்.எஸ்.ஐ அடிப்படையாகக் கொண்ட ”பீஸ் பை சாக்லேட்” (peace of chocolate)  2012 இல் போரினால் பாதிக்கப்பட்ட டமாஸ்கஸில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய ஹதாத் குடும்பத்தால் நிறுவப்பட்டது.நாடாளுமன்றத்தில் நடந்த வரவேற்பு விழாவில் பைடன் புத்தக கையொப்பமிடும் போது, ​​பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ சாக்லேட் பாரை வைத்திருந்தார்.

”பிரதமர் சாக்லேட்டை நீங்களே வைத்திருக்க வேண்டாம்” என ஒருவர் கையொப்பமிட்ட பிறகு கூறியிருக்கிறார்கள். உடனே ஜோ பைடன் “ எங்கே எனது சாக்லேட்” என கேட்கிறார்.அப்போது ஜஸ்டின் ட்ரூடோ சாக்லேட்டை தனது கையில் வைத்துக் கொண்டே சாக்லேட்டை உருவாக்கிய ஹதாத் குடும்ப வரலாற்றைப் பற்றிக் கூறுகிறார்.

”சரி, கேள்விகள் எவ்வளவு கடினமானவை என்பதைப் பொறுத்து, இந்த சாக்லேட்டை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்” என பத்திரிக்கையாளர்களிடம் வேடிக்கையாக பேசி விட்டு சாக்லேட்டை கீரின் கட்சித் தலைவர் எலிசபெத் என்பவரிடமிருந்து பெற்றுக் கொண்டு ஜோ பைடன் விடை பெறுகிறார்.

அமைதிக்கான சாக்லேட் நிறுவனத்தின் நிறுவனாரான தாரிக் ஹதாத் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எங்கள் நிறுவனத்தின் பீஸ் சாக்லேட்டை வழங்கியது வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம் என பெருமையுடன் கூறியுள்ளார்.

Exit mobile version