Site icon Tamil News

அமெரிக்காவில் பீச் சிட்டியில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்குப் பிறகு அவசர நிலை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி பீச் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டு பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குப் பின்னர் அவசர நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு 11:59 மணி முதல் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு தென் பீச்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொரு நபர் காயமடைந்ததை அடுத்துடன் , நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மியாமி கடற்கரையில் மற்றொரு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத்தின்படி, இந்த ஆண்டு இதுவரை துப்பாக்கி வன்முறையால் 8,960 க்கும் மேற்பட்ட உயிர்களை அமெரிக்கா இழந்துள்ளதாக தெரிவிக்கப்[படுகின்றது

Exit mobile version