Site icon Tamil News

அங்கொட லொக்காவின் மரணம் மரணம் மாரடைப்பினாலே ஏற்பட்டது

அங்கொட லொக்கா எனப்படும் லசந்த சந்தன பெரேராவின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உயிரிழந்த அங்கொடா லொக்காவின்  மரணம் மாரடைப்பினால்  ஏற்பட்டது என நீதிமன்றில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு அங்கொட லொக்காவின் மரணம் குறித்த சில நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றப் புலனாய்வுத் துறையின் கண்டுபிடிப்புகளின்படி, கோவை சேரன் மா நகரில் அமைந்துள்ள வாடகை வீட்டில் இருந்த அங்கொட லொக்கா 2020 ஜூலை 03 அன்று இரவு திடீரென மாரடைப்பால் இறந்தார்.

எவ்வாறாயினும் அங்கொட லொக்காவுடன் வாழ்ந்து அவர் இறக்கும் போது அங்கிருந்த இலங்கைப் பெண் உட்பட 7 இந்தியர்களுக்கு எதிரான வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக பொய்யான ஆவணங்களை வழங்குதல், குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தல், குற்றவியல் சதி செய்தல் மற்றும் தவறான அறிக்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 

Exit mobile version