Tamil News

தினம் ஒரு புட்டி ஜான்சன்ஸ் பேபி பவுடர்…அமெரிக்க யுவதியின் வினோத பழக்கம் !

அமெரிக்காவில் ஒரு பெண் தினத்துக்கு ஒரு புட்டி ஜான்சன்ஸ் பேபி பவுடரை தின்பண்டமாக ரசித்து ருசித்து வருகிறார்.

உலகில் உண்பதற்கு என எத்தனையோ ரகங்கள் நிறைந்திருக்கின்றன. இயற்கையில் விளைந்தது, செயற்கையாக தயாரானது, சமைத்தது, சமைக்காதது என பல நாடுகள், கலாச்சாரங்கள், வளங்கள் ஆகியவற்றின் பின்னணியில், ரகம் ரகமான உணவுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை தினத்துக்கு ஒன்றாக ருசி பார்ப்பதென்றால் கூட, இந்த ஜென்மம் போதாது. ஆனபோதும் சில விசித்திரப் பிறவிகள், வித்தியாசமான ருசி ரசனையோடு நம் மத்தியில் இருப்பார்கள். உணவு ரகத்தில் சேராத விபரீத சேர்மானங்களை விழுங்குவதில் அவர்கள் ஆர்வமாகவும் இருப்பார்கள்.

அமெரிக்காவில் அப்படியொரு பெண், குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பேபி பவுடரை தினமொரு புட்டியாக ருசித்து வருகிறார். அது ஆரோக்கியத்துக்கு கேடு என்பதை உணர்ந்திருந்தபோதும், அதன் சுவையிலிருந்து விடுபட முடியாது தவிக்கிறார். ட்ரேகா மார்டின் என்னும் 27 வயது பெண் திருமணமாகி, பொறுப்பான தாயாகவும் இருக்கிறார். ஆனபோதும், அனைவருடைய எச்சரிக்கையையும் மீறி அவருடைய விருப்பம் பேபி பவுடர் மீது இருக்கிறது.

One bottle a day! Mother of five has been addicted to eating talcum powder  for nearly 15 years - World News

குழந்தையை குளிப்பாட்டிய பின்னர் வழக்கமான தாய்மார்களைப் போலவே பேபி பவுடரை பயன்படுத்தும்போது, எதேச்சையாக அதனை ட்ரேகா ருசிக்க நேர்ந்தது. மக்காச்சோள மாவில் இதர வேதிசேர்மானங்கள் சேர்க்கப்பட்ட ஜான்சன்ஸ் பேபி பவுடரில் இருந்த ஏதோவொரு ருசி அவரைக் கட்டிப்போட்டது. அதன் பின்னர் வலிய பேபி பவுடர் ருசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். இந்த வகையில், லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் வசிக்கும் ட்ரேகா மார்டின் தினத்துக்கு 623 கிராம் கொண்ட ஜான்சன்ஸ் பேபி பவுடர் புட்டியை காலி செய்து வருகிறார்.

 

இதற்காக அவருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு ரூ13 லட்சம் செலவாகிறது. பேபி பவுடரை வாய் நிறைய சேர்த்து அவை உமிழ் நீருடன் கரைவதன் ருசிக்கு தான் அடிமையாகிவிட்டதாக தன்னிலை விளக்கமும் தந்திருக்கிறார் ட்ரேகா. குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமன்றி ஜான்சன்ஸ் நிறுவனம் சார்பிலும் எச்சரித்தாயிற்று; ஆனாலும் பேபி பவுடரை ருசிப்பதிலிருந்து ட்ரேகாவால் மீள முடியவில்லை. அடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த மாதங்களில் மட்டும் பொறுப்பான தாயாக பேபி பவுடரை தவிர்த்திருந்தாராம். மற்றபடி பவுடரை ருசிக்காவிடில் அன்றைய பொழுது தனக்கு முழுமையடையாது என்கிறார் ட்ரேகா.

பேபி பவுடரை ருசிப்பதில் அமெரிக்காவின் ட்ரேகா மார்டினுக்கு, ஒரு ’அக்கா’ இங்கிலாந்தில் இருக்கிறார். 5 குழந்தைகளுக்கு தாயான 44 வயதாகும் ஆன்டர்சன் என்ற பெண்மணி கடந்த 15 வருடங்களாக, தினத்துக்கு 200 கிராம் என ஜான்சன்ஸ் பேபி பவுடரை ருசித்து வருகிறார். இப்படி உணவு அல்லாதவற்றை ருசிக்கும் கோளாறை மருத்துவர்கள் ‘பிகா’(Pica) சிண்ட்ரோம் என்கிறார்கள். அவ்வாறானவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது நல்லது.

Exit mobile version