Site icon Tamil News

ஜெர்மனியில் ஆபத்தான நிலையில் பெண்கள்! வெளியான முக்கிய தகவல்

ஜெர்மனி நாட்டில் இருந்து அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்பட்ட தினத்தில் வைத்து இந்த விடயம் வெளியாகியுள்ளது.

அதாவது தற்போது பெண்கள் பாதுகாப்பு அற்ற சூழலிலேயே வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தெரியவந்திருக்கின்றது.

மேலும் சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் இருந்து பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

அதாவது ஜெர்மனியில் புள்ளி விபர திணைக்களம் அறிவித்த அறிக்கையின் படி 3 நாட்களுக்கு ஒரு நாளில் ஒரு பெண் தனது கணவராலோ அல்லது காதலராலோ  கொலை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் பெண்கள் கணவர் அல்லது காதலரால் தாக்கப்பட்ட நிலையில்  அவர்கள் அடைக்கலம் கூறுவதற்குரிய இடங்களில்  பற்றாக்குறை உள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

பயண் மாநிலத்தை எடுத்தால் அங்கே 490 இவ்வகையான அடைக்கல இடங்கள் தேவைப்படுகின்றது.

இதேவேளையில் அங்கு குறைந்த அளவு அடைக்கலம் கூறும் இடங்களே காணப்படுவதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஜெர்மனியில் இவ்வாறான அடைக்கல அமைப்புகள் நிருவுவதில் அக்கறை காட்டுவது மிக முக்கியம் என பல தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version