Site icon Tamil News

ஈஸ்டர் தாக்குதல் : விசாரணைக்கு வரும் மைத்திரியின் ரிட் மனு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த அறிவிப்பை வழங்கியது.

அதன்படி, இந்த மனு 5 நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக ஜூலை 31 மற்றும் ஓகஸ்ட் 09 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

புலனாய்வு அமைப்புகளிடமிருந்து முன்னறிவிப்புகளைப் பெற்றிருந்தும் பேரழிவைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தி கோட்டை நீதவான் அழைப்பாணை அனுப்பியது.

பின்னர், அழைப்பாணை விடுக்கப்பட்ட விதம் சட்டவிரோதமானது எனக் கூறி, அதனை இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Exit mobile version