Tamil News

GOAT படத்தின் 3 பாடல்களும் மொத்தமாக சொதப்ப விஜய்தான் காரணம்?

யுவன் சங்கர் ராஜா இப்போது GOAT படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் மூன்று பாடல்களுமே ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இதனால் அவரும் உச்சக்கட்ட அப்செட்டில் இருப்பதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள். இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “GOAT பட பாடல்கள் ரசிகர்களிடம் ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறது. இன்றுகூட யுவனின் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அதாவது, கோட் பட பாடல்களுக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸால் யுவன் ஷங்கர் ராஜா உச்சக்கட்ட அப்செட்டில் இருக்கிறாராம். மேலும் அவரிடம் யுவன், ‘ஒரு சிச்சுவேஷன் சொல்லி இசையை கேட்கிறார்கள். நான் சில ட்யூன்களை அனுப்புகிறேன். அதனை செலெக்ட் செய்யும் இடத்தில் விஜய்தான் இருக்கிறார்.

அவர் செலெக்ட் செய்த ட்யூன்கள்தான் இவை. இந்தப் படத்துக்கு முன்னதாக ஸ்டார் படம் செய்தேன். அதில் பாடல்கள் எல்லாம் நன்றாகத்தானே வந்தன. என்னை ஃப்ரீயாக விட்டால் நான் சிறப்பாகவே இசையமைத்து கொடுப்பேன்’ என கூறியதாக அவர் என்னிடம் சொன்னார்” என்றார் அந்தணன்.

Exit mobile version