Tamil News

18 வருடத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்த வில்லன்…

நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அதில் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஜோடியாக மீனக்ஷி சவுத்ரி நடிக்கிறார்.

GOAT படத்தின் ஷூட்டிங் சென்னை, கேரளா, தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்து இருக்கிறது. அவ்வப்போது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது கோட் படம் குறித்து ஒரு சூப்பர் நியுஸ் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட யுகேந்திரன் தற்போது GOAT படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதை உறுதி செய்து இருக்கிறார். அப்படத்தில் ஏற்கனவே மோகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

அந்த வகையில் படத்தில் இருக்கும் பல வில்லன்களில் ஒருவராக இவர் நடிக்கிறார்.

இதற்கு முன் யூத், பகவதி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் அவர் விஜய் உடன் பணியாற்றி இருக்கிறார்.

விஜய்யை சந்தித்து 15 வருடங்களுக்கு மேல் ஆவதால் தன்னை விஜய் நினைவு வைத்திருப்பாரா என சந்தேகத்துடன் தான் சென்றாராம் யுகேந்திரன்.

ஆனால் முதல் நாளே விஜய் அவரிடம் நன்றாக பேசினாராம். சந்தித்து 18 வருடங்கள் ஆகிறது என்பதையும் விஜய் சொன்னாராம். இதனால் யுகேந்திரன் நெகிழ்ச்சி ஆகி இருக்கிறார்.

Exit mobile version