Site icon Tamil News

பாகிஸ்தானில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த யாசகர்

பாகிஸ்தானில் யாசகர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

பாகிஸ்தானில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் யாசகர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரை சேர்ந்தவர் ஷவுகத் என்பவரே இவ்வாறு சொத்து சேர்த்துள்ளார்.

பணக்கார யாசகரான இவர், தெருத்தெருவாக உணவிற்காகவும் பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் கையேந்தி யாசகம் பெற்று வருகிறார்.

இவர் தனது குழந்தைகளை நாட்டின் மிகப்பெரிய பாடசாலையில் படிக்க வைத்து வருகிறார். அவர்களுக்கு ரூ.1 கோடி அளவிற்கு காப்பீடும் எடுத்துள்ளார். இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2021-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வங்கி கணக்கில் ரூ.17 இலட்சம் பணம் இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வரி வசூலிக்கும் நிறுவனமான பெடரல் போர்டு ஆப் ரிவென்யூ கூறியுள்ளது.

பிச்சையெடுப்பதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் ரூ.1000 இவர் சம்பாதித்து விடுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இவர் தனிப்பட்ட ரீதியாக தனது நிதி நிலைமை குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version