Site icon Tamil News

டுவிட்டர் கட்டடத்தின் மேல் ‘X’ – பாரிய சர்ச்சையில் சிக்கிய மஸ்க் – விசாரணைகள் ஆரம்பம்

டுவிட்டர் என இதுவரை அழைக்கப்பட்ட நிறுவனத்தின் கட்டடத்தின்மேல் தற்போது X என்ற சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள பெரிய ‘X’ சின்னம் தொடர்பில் அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின்மேல் எழுத்துக்களோ சின்னங்களோ பொருத்த உரிமம் பெற வேண்டும் என்று நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை கட்டடத்தின் ஒரு பக்கம் இருந்த டுவிட்டரின் குருவி சின்னத்தை ஊழியர்கள் அகற்றிக்கொண்டிருந்தபோது பொலிஸார் அவர்களைத் தடுத்துநிறுத்தினர்.

நடைபாதையில் செல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்தப் பகுதி மூடப்படாததால் வேலை நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் டுவிட்டரின் உரிமையாளரான எலோன் மஸ்க் நிறுவனத்தின் பெயரையும் சின்னத்தையும் ‘X’ என்று மாற்றியிருக்கிறார்.

Exit mobile version