Site icon Tamil News

மகளிர் ஆசிய கோப்பை – இந்திய அணி வெற்றி

9வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது. இன்று இரவு நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.

முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்த நிலையில் ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஷபாலி வர்மா 40 ரன்னில் வெளியேறினார். ஹேமலதா 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Exit mobile version