Tamil News

பார்ப்போரை நடு நடுங்க வைக்கும் பயங்கரம்… பிரபு தேவாவின் WOLF டீசர் இதோ…..

எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வினு வெங்கடேஷ். ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தற்போது இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் தான் வுல்ஃப்.

இப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ராய் லட்சுமி, அனசுயா பரத்வாஜ், ரமேஷ் திலக், அஞ்சு குரியன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

வரலாற்று காலத்திலிருந்து இன்றுவரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதையாக இதனை உருவாக்கி உள்ளார் இயக்குனர் வினு வெங்கடேஷ்.

படத்தின் கதைப்படி ஹீரோ, வில்லன் இருவருமே ஓநாயின் குணாதிசியத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் கதை.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். சந்தேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version