Site icon Tamil News

அன்பு அண்ணாவுக்கு வாழ்த்து கூறிய அன்புத் தம்பிகள்…

தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கோட் (GOAT). இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் புரோமோசன் வேலைகள் அர்ச்சனா கல்பாத்தி தலைமையில் இந்தியா மட்டும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படம் தழ்மிநாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1100 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் படத்திற்கு நடிகர் விஜய்யை வைத்து படங்கள் இயக்கிய இயக்குநர்களான அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் படம் வெற்றி பெற இயக்குநர்கள் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் என ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version