Tamil News

முல்லைத்தீவிற்கு தெற்காக உருவாகியுள்ள காற்று சுழற்சி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவித்த அவர்,  “வட கிழக்கில் இன்று (18.11) தொடக்கம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்  இன்றையதினம் சனிக்கிழமை காலை 7 மணியளவில்  இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.

இதன் காரணமாக இன்று (18.11) முதல் எதிர்வரும் 21.11.2023 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version