Site icon Tamil News

பிரான்ஸில் கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மனைவியின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி பொலிஸாால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் அவரது கணவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

அவர்களின் இரு பெண் பிள்ளைகள் பொலிஸாரை அழைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டதோடு, அவரது மனைவியையும் கைது செய்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டது.

இருவருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதம், கைகலப்பாக மாறி கத்திக்குத்து தாக்குதலில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version