Site icon Tamil News

உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டவில்லை? சஜித் கேள்வி

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள குழுக்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவது அதிபர் தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதலை முன்னிலைப்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்ததன் காரணமாக மக்கள் ஆணையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த 134 பேரால் தற்போதைய அதிபர் நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் ஈஸடர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறியும் பொறுப்பும் உண்மையை கண்டறியும் பொறுப்பும் தற்போதைய அதிபருக்கு உண்டு என குறிப்பிட்டார்.

இந்நேரத்தில் யாரும் பேதம் பாராது அனைவரும் உண்மையை பேச வேண்டும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட பிணங்கள் மீது நடந்திய அந்த அரசியலை தாம் நிராகரிப்பதாகவும், இந்நேரத்தில் உண்மை நாட்டுக்கு தேவைப்பட்டாலும், அரசாங்கம் இந்த உண்மையை மறைப்பது எந்த தரப்பை பாதுகாக்கவென கேள்வி எழுப்பினார்.அரசாங்கம் தொடர்ந்து உண்மையை மறைத்தால், பயங்கரவாதத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தென்னை உற்பத்தி செய்யும் விவசாயிகள் குழுவுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.மேலும், ஈஸ்டர் தாக்குதலினால் இந்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியின் பின்னணியில், திட்டமிட்டவர்கள், பிரதானமாக செயற்பட்டவர்கள், பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து உண்மை என்னவென்று கேள்வி எழுப்பினார்.சர்வதேச நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்புகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடக்க ஏற்பாட்டு குழு குறித்து சந்தேகத்திற்கிடமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில் உண்மை என்ன?உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version