Site icon Tamil News

பயிற்சியாளராக பதவியேற்றது ஏன்? கம்பீரிடம் விராட் கோலி கேள்வி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீரராக ஒரு காலத்தில் இருந்த கம்பீர் அதன் பிறகு ஐபிஎல் அணிகளுக்கு மென்டராக பணிபுரிந்தார்.

லக்னோ அணியின் மென்டராக இருந்த கம்பீர் அந்த அணியை ப்ளே ஆஃப் வரை அழைத்து வந்தாராம் அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் செயல்பட்ட கம்பீர் அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த சூழலில் கம்பீர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சென்றதற்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கம்பீர் பயிற்சியாளராக பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடராக இந்திய வங்கதேச போட்டிகள் இருக்கிறது.

இந்த நிலையில் விராட் கோலியிடம் கௌதம் கம்பீர் உரையாடல் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் கம்பீரிடம் பேசிய விராட் கோலி, இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரராக நீங்கள் இருந்தீர்கள்.

உங்களுடன் நான் இளம் வயதிலிருந்து விளையாடி இருக்கின்றேன். தற்போது பயிற்சியாளர் என்ற பதவியில் அமர்ந்திருக்கிறீர்கள்.

இந்த பயணம் குறித்து சொல்லுங்கள். ஏன் இந்த பதவியை தேர்ந்தெடுத்தீர்கள்.

விளையாடும் காலத்தில் பயிற்சியாளராக வருவோம் என்று நினைத்து இருக்கிறீர்களா என்று கோலி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கம்பீர் எனக்கு சவால்கள் என்றால் மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரராக இருக்கும்போதே ஒரு விஷயம் சவாலானதாக இருந்தால், அதனை நான் ஆர்வமுடன் மேற்கொண்டு செய்வேன்.

நிச்சயமாக விளையாடும் காலத்தில் பயிற்சியாளராக வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

இரண்டு மாதத்திற்கு முன்பு கூட நான் இதைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை. ஆனால் இப்படி ஒரு பதவி கிடைத்ததை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன்.

மீண்டும் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் வருவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். அதுவும் உங்களைப் போன்ற வீரர்களுடன் விளையாடிய நல்ல நினைவுகள் இருக்கிறது.

தற்போது மீண்டும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது நினைத்து ஆர்வமாக இருக்கின்றேன்.

இந்திய அணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய தொடர்களில் விளையாட இருக்கிறது. 2025 சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2026 டி20 உலக கோப்பை, 2027 50 ஓவர் உலகக் கோப்பை என அடுத்தடுத்து சவால்கள் இருக்கிறது.

இந்த சவால்களை இளம் அணி எதிர்கொள்வதை நான் காண ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் நான் விளையாடும் காலத்தில் இருந்து உங்களை கவனித்து வருகின்றேன்.

நீங்கள் 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆடிய ஆட்டம், 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக நீங்கள் 183 ரன்கள் குவித்த அந்த இன்னிங்ஸ் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

என்னை பொறுத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் ஆடிய சிறந்த இன்னிங்ஸாக அதை நான் கூறுவேன்.

மேலும் இந்திய டெஸ்ட் அணி தற்போது சிறந்து விளங்குவதற்கு நீங்களும் ஒரு காரணம்.

டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் 20 விக்கெட்டுகள் கைப்பற்ற வேண்டும். எனவே அதற்கு ஏற்ற பவுலர்களை நீங்கள் தயாரித்து வைத்திருக்கிறீர்கள் என்று கம்பீர் பாராட்டினார்.

அதற்கு பதில் அளித்த கோலி, ஆம் 24, 25 வயதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நான் பொறுப்பேற்றேன்.

அப்போது சீனியர் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். அப்போது எனக்கு கடும் சவால்கள் காத்திருந்தது.

ஒரு அணியை எப்படி உருவாக்கப் போகிறோம் என்ற சவாலை எடுத்துக்கொண்டேன்.

அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்திய அணி எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று யோசித்தேன்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற காரணத்தை பட்டியலிட்டேன். எனக்கு நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் தேவைப்பட்டார்கள்.

பும்ரா,ஷமி, உமேஷ் யாதவ், சிராஜ், இசானந்த் சர்மா போன்ற வீரர்கள் அணிக்கு கிடைத்தார்கள் என்று விராட் கோலி கூறினார்

Exit mobile version