Site icon Tamil News

இன்ஸ்டாகிராமாக மாறும் WhatsApp!

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சர்வதேச தகவல் தொடர்பு செயலியாக வாட்ஸ்அப் பயன்படுகிறது.

தகவல் தொடர்பு சுலபமாக மாறியதில், வாட்ஸ்அப் செயலிக்கும் கணிசமான பங்கு உண்டு.

முதலில் தகவல்களை சுருக்கமாக பகிர்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப், தற்போது வேலையையும் சுலபமாக்கிவிட்டது.

வாட்ஸ்அப் பயனர்களே எதிர்பார்க்காத புதுப்பிப்புகள், புதுப்புது வசதிகளை நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய அறிவிப்பு, வாட்ஸ்அப் செயலியும் இன்ஸ்டாகிராமில் உள்ள பல்வேறு வசதிகளையும் பெறலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை பயனர்களுக்குக் கொடுத்துள்ளது. இந்த புதிய அம்சம் தற்போதும் இருந்தாலும், அது வாட்ஸ்அப் இணையத்தில் (WhatsApp Web) மட்டுமே கிடைக்கிறது.

வாட்ஸ்அப் புதிய அம்சம்
வாட்ஸ்அப் பயனர்கள் தற்போது தங்கள் ஃப்ரொபைல் பெயரை உருவாக்க முடியும். இதன் மூலம், தாங்கள் யார் என்று தெரிவிக்காமலேயே மற்றொருவரை தொடர்பு கொள்ள முடியும். இதனால், பயனர்களின் பாதுகாப்பு அதிகரிக்கும்.

ஃபோன் எண் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் (WhatsApp) ஃபோன் எண்கள் மூலம் செயல்படும் செயலி என்றாலும், அதில் ஒரு பெரிய மாற்றம் வரப்போகிறது! தற்போது வாட்ஸ்அப் இணையத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த அம்சம், இனி மொபைலிலும் கிடைக்கும்.

வேலை செய்யும் முறை

பிற சமூக ஊடக செயலிகளைப் போலவே செயல்படும் அம்சமான இந்த சிறப்பம்சத்தை, மொபைலிலும் அறிமுகப்படுத்தினால் பாதுகாப்பு அதிகரிக்கும். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் வாட்ஸ்அப்பின் பயனாளர் பெயர்கள் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். மற்ற சமூக ஊடக பயன்பாடுகளைப் போல அல்லாமல், ஒருவரின் மொபைல் எண் அல்லது பெயருடன் தொடர்புடைய குறியீடு எதுவும் இருக்காத பெயராக இருக்கும். இதன் மூலம், யார் தகவல் அனுப்புகிறார்கள் என்பதை வெளி மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாது.

தகவல் பாதுகாப்பு
வாட்ஸ்அப்பில் உங்களுக்கான பயனர் பெயரை தேர்வு செய்யும்போது, ​​அது வேறு யாராலும் எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டால் போதும். ஏனென்றால், பயனர் பெயர் தான் உங்களின் சிறப்பு அடையாளமாக இருக்கும். இருந்தாலும் பயனர் பெயர் மட்டுமே இருப்பது, ஒருவரின் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாமல் போய்விடும்.

உங்கள் எண்ணை ஏற்கனவே அறிந்த உங்கள் பழைய தொடர்புகள் வழக்கம் போலவே உங்களுடன் பேசலாம். அதாவது முறையாக உங்களுடைய மொபைல் எண்ணை பெற்றவர்கள் மட்டுமே நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும். இதன் மூலம், உங்கள் தனிப்பட்ட தகவல்கள், விவரங்கள் முன்பை விட மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்பதும், நீங்கள் யாருடன் பேசலாம் என்பதை முடிவு செய்யவும் உதவியாக இருக்கும்.

அம்சம் விரைவில் வரும்

வாட்ஸ்அப்பில் பயனர்பெயர் என்ற அம்சத்தைப் பயன்படுத்தும் வசதிக்கான தொழில்நுட்பம் உருவாகிவருகிறது. இது எப்போது அமலுக்கு வரும், அனைவருக்கும் கிடைக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பயன்படுத்த எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும், பயனர்களின் வசதியை மனதில் வைத்து உருவாக்கப்படும் இந்த அம்சத்தை பிரச்சனையும் இல்லாமல் இயங்கும் வகையில் இந்த அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது.

Exit mobile version