Tamil News

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டி! வவுனியா மாணவிக்கு கிடைத்த கௌரவம்

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ள மாணவியையும் , பயிற்றுவிப்பாளரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பத்தினியார் மகிழங்குளம், சமயபுரம் மாணவியின் முயற்சியையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அவரைப் பாராட்டும் விதமாக பளுதூக்கல் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணம் வவுனியாவிலிருந்து 40கிலோ எடை பிரிவில் 16 வயதையொட்டிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் தெரிவாகி யூலை மாதம் 12 தொடக்கம் 16 ஆம் திகதிவரை டெல்லியில் நடைபெற்றிருந்தது.

கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் மூன்றாம் இடத்தினை பிடித்து வெண்கலபதக்கத்தினை குறித்த மாணவி பெற்றுள்ளார்.

பத்தினியார் மகிழங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவரின் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பத்தினியார் மகிழங்குள கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version