Site icon Tamil News

இலங்கை ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – சுற்றிவளைக்க தயாராகும் அதிகாரிகள்

இலங்கை ரயில் பயணிகள் பயணச்சீட்டு இன்றி பயணித்தால் கண்டுபிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 403 பயணிகளிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக அதன் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஏ.ஜி.அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர்களிடமிருந்து 12 லட்சத்து 93 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பயணச்சீட்டு இன்றி பயணித்த 693 பயணிகளிடம் இருந்து அறவிடப்பட்ட தொகை 2 இலட்சத்து 89 ஆயிரத்து 992 ரூபாவாகும் என ரயிலில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஏ.ஜி அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டுகளுடன் இரண்டாம் வகுப்பில் பயணித்த 5,600 பயணிகளிடம் இருந்து மொத்தம் 18 லட்சத்து 7 ஆயிரத்து 720 ரூபா அபராதப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஏ.ஜி.அனுர பிரேமரத்ன மேலும் தெரிவித்தார்.

Exit mobile version