Tamil News

வளர்ப்பு பிராணி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!! பெண்ணின் கண்ணில் நெளிந்த 60 உயிருள்ள புழுக்கள்(வீடியோ)

சீனாவில் பெண் ஒருவரின் கண்களில் நெளிந்த 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் போராடி நீக்கியுள்ளனர். வளர்ப்பு பிராணி வைத்திருப்போரை தாக்கும் இந்த புழு பாதிப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

சீனாவின் குன்மிங்கில், ஒரு பெண்ணின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். கண்களில் அரிப்பு ஏற்பட்டதையடுத்து, சீனப் பெண் கண் மருத்துவரை அணுகினார். மருத்துவ பரிசோதனையில் பெண்ணின் கண்ணில் உயிருடன் நெளியும் புழுக்கள் தென்பட்டன. கண் இமையோரம் நெளிந்த ஏராளமான புழுக்கள் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சிறப்பு கண் மருத்துவரான டாக்டர் குவான் வரவழைக்கப்பட்டார். கண்ணில் இருந்து புழுக்களை அகற்றும் செயல்முறையை தொடங்கிய டாக்டர்.குவானும் அதிர்ந்து போனார். ஒன்று இரண்டல்ல… 60 புழுக்கள் உயிரோடு நெளிவதைக் கண்டு அவரும் ஆடிப் போனார். நீண்ட மருத்துவ நடைமுறையின் பிறகு நோயாளியின் கண் இமையோரத்தில் இருந்து உருளைப் புழுக்கள் முழுவதுமாக அகற்றப்பட்டன.

Moment doctors pull 60 live WORMS from woman's eyes in stomach-churning op  after she 'felt a bit itchy' | The Sun

மிக அரிதான நிகழ்வு என்றபோதும், வளர்ப்பு பிராணி வைத்திருப்போரையே இது போன்று புழுக்கள் தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். வளர்ப்பு பிராணிகளை தொற்றுக்கள் ஏற்படாது பாதுகாப்பதோடு, செல்லப் பிராணிகளிடம் இருந்து போதிய இடைவெளி பராமரிப்பதும் நல்லது என அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக, ஏதேனும் தொற்றால் பாதிக்கப்பட்ட பூனைகள் அல்லது நாய்களின் லார்வாக்களிலிருந்து மனிதருக்கு அவை தொற்றுகின்றன.

இந்த நிகழ்வை அடுத்து, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற நிகழ்வில் சீனாவின் சிறுமி ஒருவரது கணகளில் இருந்து புழுக்கள் நீக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிகிச்சையின்போது சுமார் 11 புழுக்கள் சிறுமியின் கண்ணிலிருந்து அகற்றப்பட்டன.

Exit mobile version