Site icon Tamil News

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை நடத்தப்படலாம் என இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் விமானம் குண்டு வீசி தாக்கியதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதிகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இததற்கு பழிவாங்கும் வகையில் நள்ளிரவில் ஈரான் 300க்கும் அதிகமான டிரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது.

அதில்,99 சதவீத டிரோன்கள், ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஈரான் ஏவிய 300 டிரோன்களில் 80 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுக்கும் என்ற கருத்து நிலவுவதால் மேற்கு ஆசியாவில் பதற்றம் உருவாகியுள்ளது.
இதனிடையே ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவுள்ளதாக அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்கலாம் என இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version