Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் விசாக்களுக்கு கட்டுப்பாடு – கடும் நெருக்கடியில் சர்வதேச மாணவர்கள்

ஆஸ்திரேலியாவில் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக பட்டதாரி விசா அனுமதிப்பத்திரத்தின் வயது மட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையினால் PhD பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனைவர் பட்டம் பெற்று ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற நேரிடும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் இந்த விசா பிரிவினருக்கான வயது வரம்பு 50லிருந்து 35 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், PhD முடித்த பிறகு ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலம் 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் பிரித்தானியா எமற்றும் ஹாங்காங் மாணவர்களுக்கு பொருந்தாது.

மத்திய அரசு விதிகளை மாற்றியமையால் தாங்கள் மிகவும் சங்கடமடைந்துள்ளதாக சர்வதேச மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version