Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் குவிந்து கிடக்கும் விசா விண்ணப்பங்கள் – நெருக்கடியில் அதிகாரிகள்

பல்வேறு பெற்றோர் விசா வகைகளின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு காத்திருக்கும் 143,000 இற்கும் அதிகமானோரின் விண்ணப்பங்கள் இன்னும் குவிந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது.

வருடாந்திர விசா ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 8,500 பெற்றோர் விசாக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

எனவே, ஒவ்வொரு மாதமும் பெறப்படும் புதிய விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடிவரவுத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையைத் தவிர்க்க, அப்போதைய லிபரல் கூட்டணி அரசாங்கம் 2019 இல் பெற்றோருக்கு 05 வருட தற்காலிக விசாவை அறிமுகப்படுத்தியது.

ஆனால் 2020-2023 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 9,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆஸ்திரேலியா பெற்றோரின் வீசாக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை காலவரையின்றி அதிகரித்தால், சுகாதார அமைப்பால் சமாளிக்க முடியாது என்ற அனுமானமே இதற்குக் காரணமாகும்.

Exit mobile version