Site icon Tamil News

”கன்னி கர்ப்பம்” : அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மீனினம்!

சார்லோட் தி ஸ்டிங்ரேயின் என்ற மீனினம் கன்னி கர்ப்பம் அடைந்து உலகளாவிய பத்திரிக்கைகளில் தலைப்பு செய்திகளை உருவாக்கியுள்ளது.

வட கரோலினாவில் உள்ள மீன்வளம் மற்றும் சுறா ஆய்வகம், ஸ்டிங்ரே என்ற மீனினம் கன்னி தன்மையாக இருக்கும்போதே கர்ப்பம் அடையும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எட்டு ஆண்டுகளாக ஆண் ஸ்டிங்ரேயை சந்திக்காத போதிலும் குறித்த மீன் கர்ப்பம் அடைந்துள்ளது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“இது மிகவும் விசித்திரமான மற்றும் தனித்துவமான நிகழ்வு” என்று அதன் நிர்வாக இயக்குனர் பிரெண்டா ராமர்  தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமான விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

Exit mobile version