Site icon Tamil News

பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விர்ஜின் அட்லாண்டிக் விமானம்!

விர்ஜின் அட்லாண்டிக் விமானம் எடின்பரோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் ஏ350-1000 விமானம் ஆர்லாண்டோவில் இருந்து காலை 11 மணிக்கு தலைநகரில் தரையிறங்க இருந்தது.

புளோரிடாவில் உள்ள நகரத்திலிருந்து புறப்படும்போது, ​​முன் பகுதி கியர் வெடித்ததாக கூறப்படுகிறது.

விமானம் எடின்பரோவில் தரையிறங்கியபோது அவசர பணியாளர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். அத்துடன் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரவித்துள்ளது.

இச்சம்பவம் ஸ்காட்டிஷ் தலைநகரில் இருந்து புறப்படும் பிற விமானங்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version