Site icon Tamil News

கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட் கோலி!

கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

நேற்று முன்தினம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்தார். அது என்ன சாதனை என்றால் ஒரு அணிக்காக அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை தான். போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர்கள் அடித்தார்.

அந்த போட்டியில் அவர் 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் பெங்களூர் அணிக்காக அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 241-ஆனது. எனவே, இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் ஒரு அணிக்காக விளையாடி அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். இதற்கு முன்னதாக பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 239 சிக்ஸர்கள் அடித்து இருந்தார்.

கிறிஸ் கெயில் தான் பெங்களூர் அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை வைத்திருந்த நிலையில் தற்போது அவரை விராட் கோலி மிஞ்சியுள்ளார். அதைப்போலவே, ஐபிஎல் வரலாற்றில் மொத்தமாக அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலிலும் எம்எஸ்தோனியை விராட் கோலி பின்னுக்கு தள்ளி உள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் எம்.எஸ்.தோனி 239 சிக்ஸர்கள் அடித்து 4-வது இடத்தில் இருந்தார். நேற்றய போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர் அடித்து 241 சிக்ஸர்களை பதிவு செய்து தோனியை பின்னுக்கு தள்ளினார்.

Exit mobile version