Site icon Tamil News

விஜய்யின் GOAT திரைப்படம் – இலங்கையில் படப்பிடிப்பு ஆரம்பம்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் The Greatest of All Time (GOAT) திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்கள் இலங்கையில் தற்போது ஒளிபதிவு செய்யப்பட்டு வருகின்றன.

காலி, கண்டி உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்புக்கள் தற்போது இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் மோகன் உள்ளிட்ட பலர் இலங்கையில் இடம்பெறும் படப்பிடிப்புக்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தளபதி விஜய்யின் காட்சி அனைத்தும் ஒளிபதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் எஞ்சிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

GOAT திரைப்படத்தில் விஜய் நடிக்கும் சில காட்சிகளை இலங்கையில் படமாக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தீர்மானம் பின்னர் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், GOAT திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்களுக்காக இலங்கைக்கு விஜய் வருகைத் தருவது தற்போது  கேள்விக்குறியாகியுள்ளது.

Exit mobile version