Tamil News

அரசியல் பிரவேசம்.. ஒரு மீட்டிங் போட்டதுக்கு இப்படியா? 500 ரூபாய் அபராதம்

போக்குவரத்து ரூல்ஸ்படி சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் இன்று தனது மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்திக்க சென்ற போது சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தும் காரில் நிற்காமல் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வரப்போவதாக கூறப்படும் நிலையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். சட்டத்தை மதிக்க வேண்டிய அவரே சட்டத்தை மீறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாணவர்களை அரசியலுக்கு அழைக்கும் விஜய் கையில் சிகரெட்டுடன் நடிக்கலாமா என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மக்கள் இயக்கத்தினரை அழைத்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தியுள்ளார் விஜய். இது குறித்து கருத்து கூறியுள்ள அவரது ரசிகர்கள்,

அவர் கண்ணசைத்தால் போதும் முழு அரசியலில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே இன்றைய தினம் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பனையூர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது போக்குவரத்து சிக்னலில் சிவப்பு நிற விளக்கு எரிந்த நிலையில் அனைத்து வாகனங்களும் நின்று கொண்டிருந்தது. ஆனால் விஜய்யின் கார் சிக்னலை மதிக்காமல் வேகமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனால் பலரும் விஜயின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்தனர். இந்த நிலையில் போக்குவரத்து சிக்னலை மதிக்காத விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். விஜய் பயன்படுத்திய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது என்று சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டினர். அந்த வீடியோவை சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு டேக் செய்து இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிலர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி இருந்தனர்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த சென்னை போக்குவரத்து காவல்துறையினர், நடிகர் விஜய் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் போக்குவரத்து சிக்னலை மதிக்காத விஜய்க்கு 500 ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version