Tamil News

அம்மா – அப்பாவுடன் விஜய்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து கோட், தளபதி 69 என ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோன்று அவருடைய தனிப்பட்ட விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தும். அப்படித்தான் இவருக்கும் இவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கும் இருக்கும் மனவருத்தம் அனைவருக்குமே தெரியும்.

ஆனால் இதைப்பற்றி விஜய் மௌனம் சாதித்தாலும் எஸ் ஏ சந்திரசேகர் அவ்வப்போது மீடியாவில் உளறி கொட்டி விடுவார். அதுவே எரிகிற தீயில் நெய்யை ஊற்றிய கதையாக மாறிவிடும்.

இந்நிலையில் விஜய் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

அதில் அவர் இருவரின் தோள் மீதும் கையை போட்டு அணைத்தபடி நிற்கிறார்.

இதற்கு முன்பு கூட எஸ் ஏ சந்திரசேகர் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்ற போது விஜய் அவரை நேரில் சந்தித்து இருந்தார். அந்த போட்டோவும் வைரலானது.

அதன் பிறகு தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லாமல் சொல்லிவிட்டது.

இதன் மூலம் விஜய் பெரும் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

Exit mobile version