Tamil News

நீயா நானா நிகழ்ச்சியில் கண் கலங்கிய மாணவன்.. ஓடோடி உதவிய தளபதி

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை டார்கெட் செய்து அதற்காக தற்போதிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக மக்களின் குறைகளை கேட்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார் விஜய்.

அந்த வகையில் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் குடும்ப வறுமையால் பார்ட் டைம் வேலைக்கு சென்றுகொண்டே படிக்கும் இளைஞர்கள் தாங்கள் தினசரி படும் கஷ்டங்களை பற்றி மனம்விட்டு பேசினர்.

அதில் ஒரு மாணவர், குடும்ப வறுமையால் மூட்டை தூக்கி சம்பாதிப்பதாக கூறினார். தினசரி மூட்டை தூக்குவதால் தோலில் வலி இருக்கும் என கூறிய அவர், வீட்டில் தன் அம்மாவிடன் வலியை காட்டிக்கொள்ள மாட்டேன் என சொன்னார்.

அதுமட்டுமின்றி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது பஸ்ஸை மிஸ் பண்ணிவிட்டால் 3 கிலோமீட்டர் நடந்தே செல்வேன் என சொன்ன அந்த இளைஞரிடம், அப்போது உங்கள் மனதில் என்ன ஓடும் என கோபிநாத் கேட்க, அதற்கு, என் அம்மாவை நல்ல வீடு கட்டி உட்கார வைக்க வேண்டும். நல்ல படிச்சு வேலைக்கு போகணும், என் அம்மா தரையில் தான் படுத்திருப்பார் அவருக்கு ஒரு மெத்தை வாங்கி கொடுக்க வேண்டும் என நினைப்பேன் என கூறினார்.

இந்த வீடியோ மிகவும் வைரலான நிலையில், முதல் ஆளாக அந்த இளைஞருக்கு வீடு தேடி உதவி இருக்கின்றனர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர். அந்த நிகழ்ச்சியை பார்த்த அரை மணி நேரத்தில், விஜய்யின் உத்தரவுக்கு இணங்க அந்த இளைஞரின் வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மெத்தை மற்றும் ரூ.25 ஆயிரத்தையும் கொடுத்ததோடு, அந்த இளைஞரின் கல்விச் செலவையும் ஏற்பதாக விஜய் உறுதியளித்துள்ளாராம். விஜய் செய்த இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Exit mobile version