Tamil News

“வேட்டையன்” – ரஜினியின் குட்டி ஸ்டோரி கேட்க ரெடியா மக்களே?

சூர்யாவை வைத்து ஜெய்பீம் எனும் தரமான சம்பவத்தை செய்த இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கப் போவதாகவும் அனிருத் லைவ் பர்ஃபார்மன்ஸ் செய்து ஜெயிலர் வைபை மீண்டும் ரீக்ரியேட் செய்வார் எனக் கூறுகின்றனர்.

மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன குட்டி கதை சொல்லப்போகிறார் என்பதை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Exit mobile version