Site icon Tamil News

சதித் திட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க, ஸ்பானிய நாட்டவர்களை கைது செய்த வெனிசுவேலா

நாட்டை நிலைகுலைய வைக்க சதித் திட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் மூன்று அமெரிக்க, இரு ஸ்பானிய, ஒரு செக் நாட்டவரை வெனிசுவேலா அரசு கைதுசெய்து உள்ளது.

இதுபற்றிக் கூறிய வெனிசுவேலா நாட்டு உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபேலோ, நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மடுரோவையும் மற்ற உயர் அதிகாரிகளையும் சந்தேக நபர்கள் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

வெனிசுவேலாவில் சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் மடுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டைச் சேர்ந்த 16 அதிகாரிகள் மீது தடை விதித்தது. இந்நிலையில், வெனிசுவேலா அரசு அதிபரையும் உயர் அதிகாரிகளையும் கொல்ல சதி தீட்டப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஸ்பானிய நாட்டுக்காரர்கள் அந்நாட்டு தேசிய உளவு அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று வெனிசுவேலா கூறியது. எனினும், உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த தகவல்களில் கைது செய்யப்பட்ட இரு ஸ்பானிய நாட்டவர்களும் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று ஸ்பானிய அரசு தெளிவுபடுத்தியது.

செய்தியாளர் மாநாட்டில் சனிக்கிழமை பேசிய கபேலோ, “அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ இந்தத் திட்டத்துக்கு தலைமை தாங்கி வருகிறது. அது எங்களுக்கு ஆச்சரியமளிக்கவில்லை. இதில் ஸ்பானிய உளவு அமைப்பு, சிஐஏ இந்தப் பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பதால், அது சத்தமில்லாமல் செயல்பட்டு வருகிறது,” என்று சொன்னார்.

இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

Exit mobile version