Site icon Tamil News

எகிப்திய நெடுஞ்சாலையில் தீயில் எரிந்த வாகனங்கள் : 35 பேர் உயிரிழப்பு!

எகிப்திய நெடுஞ்சாலையில் இன்று (28.10) காலை பேருந்து ஒரு பல கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எகிப்தில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை, அங்கு சாலைகள் பெரும்பாலும் மோசமான  நிலையில் இருப்பது அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

“வாடி அல்-நட்ரூனுக்கு அருகே கெய்ரோ-அலெக்ஸாண்டிரியா பாலைவன சாலையில் மேற்படி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள், ஒரு லாரி கவிழ்ந்து எரிந்த தார் மீது வேகமான பாதையின் குறுக்கே கிடப்பதைக் காட்டியது.

மேலும், குறைந்தது ஒரு பேருந்து மற்றும் ஒரு மினிபஸ் ஆகிய இரண்டும் பெருமளவில் தீயில் எரிந்து நாசமானது, மேலும் பல கார்கள், இன்னும் சில தீயில் எரிந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

விபத்து குறித்த விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version