Site icon Tamil News

பல்வேறு சட்ட மீறல்கள்; இரண்டு நாட்களில் 36 வாகனங்களை துபாய் பொலிசார் பறிமுதல்

பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட 36 வாகனங்களை துபாய் காவல்துறை போக்குவரத்து ரோந்துப் பிரிவு பறிமுதல் செய்தது. இரண்டு நாட்களில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், ஒருவரின் உயிருக்கோ மற்றவர்களின் உயிருக்கோ ஆபத்தை ஏற்படுத்துதல், வாகனத்தின் இயந்திரம் அல்லது தோற்றத்தை மாற்றுதல், குடியிருப்பாளர்களுக்கு இடையூறு விளைவித்தல், தெளிவற்ற நம்பர் பிளேட்களை பொருத்துதல் மற்றும் பொதுச் சாலைகளில் குப்பைகளை வீசுதல் ஆகியவை கண்டறியப்பட்ட மீறல்களாகும்.

2023 ஆம் ஆண்டின் உத்தரவின்படி, இதுபோன்ற சட்ட மீறல்களை காவல்துறை கடுமையாகக் கையாளும் என்று கர்னல் அல் கைதி கூறினார்.

வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால், இவற்றை விடுவிப்பதற்கான அபராதம் 50,000 திர்ஹம் வரை இருக்கலாம்.

உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் அல்லது வீதிகளை சேதப்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதம், வாகனங்கள் பறிமுதல் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மீறல்களை துபாய் பொலிஸ் செயலியில் உள்ள ‘போலீஸ் ஐ’ சேவை மூலமாகவோ அல்லது 901 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ புகாரளிக்கலாம்.

Exit mobile version