Site icon Tamil News

Bigg Boss 8 Promo: புதிய பிக் பாஸ் ஹோஸ்ட் இனி இவர்தான்… மக்கள் செல்வன் கலக்கல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக உள்ள நிலையில், கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது என நகர்ந்து விட்டார்.

கமல்ஹாசன் அளவுக்கு கெத்தாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கம்பீரமாக அடுத்து நடத்தப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு தான் சரியான நபர் என பலரும் கூறி வந்தனர்.

ஆனால், பிரம்மாண்ட பொருட்செலவில் சிம்பு நடித்து வரும் நிலையில், அவர் நோ சொல்லி விட்டார். அதன் பின்னர், வலை வீசி தேடியதில் கடைசியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதித்துள்ளார்.

அவர் பிக் பாஸ் ஹோஸ்ட்டாக மாறியுள்ள அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனுக்கான புதிய லோகோவுடன் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்பதை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

கமல் மாதிரி பேசாமல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சின்ன ஸ்மைல் மட்டும் பண்ணி விட்டு சீக்கிரமே உங்களை சந்திக்கிறேன் என்பதை இந்த ப்ரோமோவில் சொல்லியுள்ளார். அக்டோபர் மாதம் முதல் வாரத்திலேயே பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version