Site icon Tamil News

மனிதர்களுக்கும் தடுப்பூசி – உலகின் முதல் நாடாக பின்லாந்து எடுத்த நடவடிக்கை

உலகின் முதல் நாடாக பின்லாந்து அடுத்த வாரத்திலிருந்து சில ஊழியர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தடுப்பூசியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

குறிப்பாகக் கால்நடைகளுடன் தொடர்புடையவர்களுக்கு அத்தடுப்பூசி செலுத்தப்படும் என்று பின்லாந்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை மூலம் உலகில் மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தடுப்பூசியைப் பயன்படுத்தும் முதல் நாடாகப் பின்லாந்து மாறியுள்ளது.

இப்போதைக்குச் சுமார் 10,000 பேருக்குத் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அத்தடுப்பூசி போடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

H5N1 ரகப் பறவைக் காய்ச்சல் காரணமாக அண்மை ஆண்டுகளில் உலகம் முழுதும் மில்லியன் கணக்கான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. மாடு உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் அது பரவுகிறது. சில சம்பவங்களில் மனிதர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பின்லந்தில் இதுவரை மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்றவில்லை. ஆனாலும் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்க அந்நாடு ஆர்வத்துடன் இருக்கிறது.

Exit mobile version