Site icon Tamil News

இஸ்ரேல் போர் நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைத்து கொள்வதற்கான நேரம் இது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா இஸ்ரேலுடனான கருத்து முரணை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.

பன்னாட்டளவில் போர் நிறுத்தத்துக்கும் கைதிகளை விடுவிக்கவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் 100 நாள்களாகத் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா தொடங்கி பல நாடுகளில் இரு தரப்புக்குமான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version