Site icon Tamil News

அமெரிக்க – மெக்சிகோ எல்லை பாதுகாப்பாக இல்லை: பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அமெரிக்க-மெக்சிகோ எல்லை பாதுகாப்பாக இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

குடியேற்ற அமைப்பில் “பாரிய மாற்றங்களுக்கு” அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எல்லைப்பகுதி பாதுகாப்பாக உள்ளதா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உக்ரைன், இஸ்ரேல் மற்றும் தைவானுக்கான இராணுவ உதவிக்கு நிதியளிக்கும் அமர்வின்புாது செனட் சபை உறுப்பினர்கள் எல்லை பிரச்சினை குறித்து ஒப்பந்தத்தை எட்டுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எல்லையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரிகள் எங்களிடம் இருப்பதை உறுதி செய்வதற்காக, எங்கள் புகலிட அமைப்பில் மாற்றங்கள் உட்பட, எல்லையில் குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றங்கள் தேவை என்று நான் நம்புகிறேன் என்றும் அதற்காக செயற்பட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version