Site icon Tamil News

பிரித்தானியாவில் அதிர வைத்த கும்பல் – 54 மில்லியன் பவுண்ட் மோசடி

பிரித்தானியாவில் யுனிவர்சல் கிரெடிட் எனப்படும் கொடுப்பனவில் மோசடி செய்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய மோசடியாக இது கருதப்படுகின்றது.

ஆடம்பர வாழ்க்கை முறைக்காக பல்கேரிய மோசடி கும்பல் யுனிவர்சல் கிரெடிட் மோசடியில் 54 மில்லியன் பவுண்டுகளை திருடியது

இந்த கும்பல் உண்மையான நபர்களையோ அல்லது திருடிய அடையாளங்களையோ பயன்படுத்தி யுனிவர்சல் கிரெடிட்டுக்காக ஆயிரக்கணக்கான தவறான உரிமைகோரல்களை உருவாக்கியுள்ளது.

மேலும் போலியான சம்பள பற்றுச்சீட்டுகள் மற்றும் போலி மருத்துவ கடிதங்கள் உட்பட போலி ஆவணங்களை இந்த கும்பல் தயாரித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, லண்டனில் உள்ள மூன்று தொழிற்சாலைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அங்கு பல மோசடிக்கு பயன்படுத்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையிலான காலப்பகுதிகளில் 6000 பேருக்கான நன்மைகளை மோசடியான முறையில் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சூட்கேஸ்களில் அடைக்கப்பட்ட பணம், சொகுசு கார் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைக்கடிகாரங்கள், ஜெக்கெட்கள் மற்றும் கண்ணாடிகள் உட்பட பல விலையுயர்ந்த பொருட்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

 

Exit mobile version