Site icon Tamil News

ரஷ்யப் போரில் தாக்குப்பிடிக்க முடியவில்லை – ஆயுதங்கள் கோரும் ஜெலன்ஸ்கி

ரஷ்யாவுடனான போரில் தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் அதிநவீன ஆயுதங்கள் வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசியதாக அவர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கான அமெரிக்க நிதி உதவி நிறுத்தப்பட்டால் அது உக்ரைன் மட்டுமல்லாமல் ஐரோப்பாவுக்கும் மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும் என்றார்.

உக்ரைனுக்கான 95 பில்லியன் டாலர் நிதி உதவித் திட்ட மசோதாவை அமெரிக்க செனட் சபை ஏற்றுக்கொண்ட நிலையில், அந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு விட பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மறுத்துவிட்டதால் ஜெலன்ஸ்கி இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version