Site icon Tamil News

‘கேப்டன் மில்லர்’ படத்தில் இருந்து வெளியானது இரண்டாவது சிங்கிள்…

கோலிவுட் திரையுலகில் அறிமுகமானாலும், பாலிவுட்.., டோலிவுட், ஹாலிவுட் என கலக்கி கொண்டிருக்கும் நடிகர் தனுஷ், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளர்.

இதுவரை தனுஷ் நடித்து வெளியான பாடங்களை விட மிகவும் வித்தியாசமான தோற்றத்தில்… போராளியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாக உள்ளதால், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது இப்படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலான ‘உன் ஒளியிலே’ பாடல் உருவாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இப்பாத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் மெலடி மழை பொங்கும் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான சீன் ரோல்டன் பாடியுள்ளார்.

Exit mobile version