Site icon Tamil News

ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. தீர்மானம்-இந்தியா புறக்கணிப்பு

அண்மை காலமாக உக்ரைன் மின்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக ஐ.நா.வில் நேற்று முன்தினம் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பொதுசபை, உக்ரைனின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

பின்னர் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.ரஷியா, பெலாரஸ், கியூபா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

இந்தியா, சீனா, வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான் உள்பட 99 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

Exit mobile version