Site icon Tamil News

uk வின் GSP திட்டத்திற்கு பதிலாக அமுலுக்கு வந்த புதிய திட்டம்!

ஐக்கிய இராச்சியத்தின்  அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின்  புதிய வர்த்தகத் திட்டம் (DCTS) இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

தற்போதைய விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு (GSP) பதிலாக இந்த திட்டம் அமுலுக்கு வருகின்றது.

டி.சி.டி.எஸ் என்பது பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டம்+ (ஜி.எஸ்.பி.) ஐ மாற்றுவதாகும்.

இந்த புதிய திட்டமானது   92 சதவீத பொருட்களுக்கு இங்கிலாந்துடன் சுங்கவரியின்றி வர்த்தகம் செய்ய இலங்கையை அனுமதிக்கிறது.

இது இங்கிலாந்து சந்தையில் இலங்கை தயாரிப்புகளின் போட்டித்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கிறது என்றும்  உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. .

கூடுதலாக, அரைக்கப்பட்ட தானியங்கள், செல்லப்பிராணி உணவு பொருட்கள் மற்றும் பால் பொருட்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட கூடுதல் பொருட்கள் புதிய திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என்றும், சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு ஏற்ப இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Exit mobile version