Tamil News

தீவிரமடையும் போர் களம்! உக்ரைனில் நீர்மின் நிலைய அணை மீது தாக்குதல்

சோவியத் கால அணையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள உக்ரைன் நீர்மின் நிலைய அணை தகர்க்கப்பட்டது தொடர்பான காணொளியை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் சோவியத் கால ககோவ்கா நீர்மின் நிலைய அணை காணப்படுகிறது.

உக்ரைனின் பிரதான நீர்மின் நிலையத்திற்கு நீரை வழங்கும் முக்கிய அணை இதுவாகும்.

இதற்கு காரணம் யார் என்று தெரியாத நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர்.

அதே சமயம், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான Zaporizhzhia அணுமின் நிலைய அணை அழிந்ததால் எந்த ஆபத்தும் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டது தொடர்பான காணொளியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிர்ந்துள்ளார்.

அத்துடன், ”ககோவ்கா நீர்மின் நிலைய அணையின் அழிவு, உக்ரேனிய நிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் ரஷ்ய பயங்கரவாதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை முழு உலகிற்கும் உறுதிப்படுத்துகிறது’ என தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இந்நிலையில் வான்வெளி தாக்குதலால் இந்த அணை அழிக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version